
ஷா ஆலாம், ஏப்ரல்-16-சிலாங்கூர் ஷா ஆலாமில், ஓர் ஆடவர் நாய்க்குட்டியை நீர் தொட்டியில் மூழ்கடிக்கும் வீடியோ வைரலான நிலையில், சந்தேக நபர் கைதாகியுள்ளார்.
20 வயதிலான அவ்விளைஞர் கட்டுமானத் தளமொன்றில் நேற்று பிற்பகலில் பிடிபட்டார்.
வீடியோ டிக் டோக்கில் வைரலான நிலையில் இக்கைது மேற்கொள்ளப்பட்டது.
அவ்வாடவரிடமிருந்து, 3 நாய்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
2015 விலங்கு நலச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் போலீஸை தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வைரலான 22 வினாடி வீடியோவில், தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் ஒரு நாய்க் குட்டியை அவ்வாடவர் மூழ்கடிக்க முயல்வது தெரிந்தது.



