
நீலாய், அக்டோபர்-3,நெகிரி செம்பிலான், நீலாயில் தொலைத்தொடர்பு கேபிள்கள் மற்றும் சாதனங்களை திருடிவந்த 7 கும்பல்களைச் சேர்ந்த 47 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
இவ்வாண்டு நிகழ்ந்த இத்திருட்டுச் சம்பவங்களால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4.5 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நீலாய் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 17 முதல் 58 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் பிடிபட்டதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹாரி யாஹ்யா (Johari Yahya) தெரிவித்தார்.
‘Gang Krol Copperstrip’, ‘Gang Leong Cabel, ‘Gang Usop Klang’, ‘Gang Indhiran Cabel’ ஆகிய கும்பல்கள் இதில் அடங்கும்.
அதிகாரிகளை ஏமாற்ற தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள் போல் வேடமிட்டு, கோபுர தளங்களுக்குள் நுழைந்து copper கேபிள்கள், மின்னல் கடத்திகள் மற்றும் மின்னியல் பாகங்களை இவர்கள் திருடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதானவர்களிடமிருந்து கேபிள் சுருள்கள், வெட்டும் கருவிகள் மற்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.



