
லிங்கி, ஜூலை-23-பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நெகிரி செம்பிலான் அரசாங்கம் அனைவருக்குமான அரசு.
எல்லா இன மக்களுக்கும் மாநிலத்தின் வளப்பதை அனுபவிக்க வாய்ப்பை வழங்கும் அரசு என்கிறார், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண்.
மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு நெகிரியில் மக்கள் நலத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன; இந்தியச் சமூகம் அதில் விடுபடவில்லை என, லிங்கி சட்டமன்ற வேட்பாளருமான அவர் சொன்னார்.
எனவே இவற்றை எல்லாம் சீர்தூக்கி பார்த்து, ஆகஸ்ட் 1 தேர்தலில் நெகிரி வாக்காளர்கள் சரியான தேர்வைச் செய்ய வேண்டுமென அமினுடின் கேட்டுக் கொண்டார்.
வேலை வாய்ப்பு, வீடமைப்பு, நியாயமான சம்பளம், அனைவருக்குமான மேம்பாடு என மாநிலத்தையே உருமாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த அனுகூலங்களுக்கு மக்களுக்குத் தொடர வேண்டுமென்றார்.
2023 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பக்காத்தானு, பாரிசான் நேஷனலும் இணைந்து மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்த நிலையில், இந்த 16-ஆவது சட்டமன்றத் தேர்தலில் அவைத் தனித்து போட்டியிடுகின்றன.
பக்காத்தான் அனைத்து 36 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ள நிலையில், பாரிசானோ, பெரிக்காத்தான் நேஷனலுடன் புரிந்துணர்வை மேற்கொண்டு 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாக்கி 11 தொகுதிகளில் பெரிக்காத்தான் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.



