Latestமலேசியா

நேப்பாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்கள்; கடன் தவணைகளுக்கு தற்காலிக அவகாசம் கோரும் குடும்பத்தினர்

புத்ராஜெயா, செப்டம்பர்-28,நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினர், அவர்களது கடன் மாத தவணைகள் மற்றும் நிதிப் பொறுப்புகளுக்கு தற்காலிக அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் போனவர்களின் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட நிதிப் பொறுப்புகள் தொடர்ந்து நிலுவையில் இருப்பதால், குடும்பத்தினர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

அதற்காகக் கடன்களை இரத்துச் செய்யுமாறு தாங்கள் கோரவில்லை என்றும், காணாமல் போனவர்களின் சட்டப்பூர்வ நிலை குறித்து தெளிவு கிடைக்கும் வரை, கடன் தவணைகள், தாமதக் கட்டணம் மற்றும் வசூல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ராவில் நேற்று நடைபெற்ற சிறப்புச் சந்திப்புக்குப் பின்னர், வழக்கறிஞர் வாயிலாக குடும்பத்தினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதற்கிடையில், காணாமல் போனவர்களை அடையாளம் காணும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அவர்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்து DNA மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான தேடல் மற்றும் அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக குடும்பத்தினர் நம்பிக்கைத் தளராமல் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!