Latestமலேசியா

பள்ளி மாணவர்கள் கொளுத்தும் வெயிலில் உணவருந்த விடப்பட்டார்களா? திரங்கானு கல்வி இலாகா மறுப்பு

குவாலா திரங்கானு, செப்டம்பர்-26,கெமாமான் மாவட்டத்தில் உள்ள தேசியப் பள்ளியொன்றில் கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் உணவருந்த விடப்பட்டதாகக் கூறப்படுவதை, திரங்கானு கல்வி இலாகா (JPNT) மறுத்துள்ளது.

அப்பள்ளியின் சிற்றுண்டிச் சாலையில், ஓய்வு நேரத்தின் போது மாணவர்கள் அமர்ந்து உணவுண்ணும் அளவுக்கு வசதியுள்ளது.

அங்கு தான் அவர்கள் தினமும் உணவருந்தி வருவதாக JPNT கூறியது.

ஆனால், சிற்றுண்டிச் சாலை அருகே நிழலுக்காக வேண்டி canopy கூடாரங்களும் போடப்பட்டுள்ளன.

ஓய்வு நேரத்தில் மாணவர்கள் அங்கே சாதாரணமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது வழங்கம்.

அது ஓய்வெடுப்பதற்கே தவிர மாணவர்கள் தினமும் அமர்ந்து உணவருந்த அல்ல.

ஆனால், கடந்த செவ்வாய்க் கிழமையன்று வீசியப் புயலில் அக்கூடாரங்கள் சேதமடைந்து விட்டன.

அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான், தவறான தகவலோடு வைரலாக்கியுள்ளனர்.

எனவே, மாணவர்கள் வெளியில் அமர்ந்து உணவருந்தும் நிலைக்குத் தளப்பட்டதாக கூறிய முகநூல் பதிவில் உண்மையில்லை என JPNT தெளிவுப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!