Latest

பாலிக் பூலாவ் கார் ‘workshop’- இல் தீவிபத்து; மெர்சிடீஸ் உட்பட நான்கு கார்கள் சேதம்

பாலிக் பூலாவ், டிசம்பர் 29 – பாலிக் பூலாவ் Jalan Pondok Upeh பகுதியிலுள்ள கார் ‘workshop’-இல், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், மெர்சிடீஸ் உட்பட நான்கு வாகனங்கள் சேதமடைந்தன.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே, தீயணைப்பு துறையினர் மூன்று நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்தனர். ஒரு மாடி கொண்ட அந்த வாகன ‘workshop’ சுமார் 50 விழுக்காடு தீயால் பாதிக்கப்பட்டது.

Mercedes, Perodua Kancil, Ford Fiesta மற்றும் Proton Iswara  ஆகிய வாகனங்கள் சுமார் 20 விழுக்காடு வரை தீயிக்கிறையாயின. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தீயணைப்பு துறையினர் அத்தீயை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தத் தீ விபத்திற்கான காரணம் மற்றும் இழப்புகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!