கோலாலம்பூர், ஏப் 5 – Fifa எனப்படும் அனைத்துலக காற்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள ranking அதாவது காற்பந்து தர பட்டியலில் மலேசியாவின் Harimau Malaya காற்பந்து குழு 138ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 132 ஆவது இடத்தில் இருந்த மலேசிய காற்பந்து குழு உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய கிண்ணத்திற்கான தகுதி சுற்று போட்டியில் 15.63 புள்ளிகள் குறைந்ததைத் தொடர்ந்து தற்போது மோசமான இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22 தேதி Muscat ட்டிலும் பின்னர் மார்ச் 26ஆம் தேதி புக்கிட் ஜாலிலும் Oman குழு வுடனான இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி கண்டதால் மலேசியா குழுவின் அனைத்துலக தரம் வீழ்ச்சி கண்டள்ளது. இந்த தோல்வியினால் உலகக் கிண்ண தகுதி சுற்று மற்றும் ஆசிய கிண்ண தகுதிச் சுற்று போட்டியில் டி பிரிவில் ஆறு புள்ளிகளுடன் மூன்றாது இடத்தில் ஹரிமாவ் மலாயா குழு உள்ளது. அதே வேளையில் Kyrgyzstan ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் , தைவானை 5 -1 கோல்களில் வீழ்த்தியதன் மூலம் தற்போது 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. Oman குழுவும் 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.