ஜோர்ஜ் டவுன் , ஏப் 11 – பினாங்கில் நேற்று பெய்த கடும் மழையுடன் வீசிய பலத்த காற்றினால் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் பாதிக்கப்பட்டது. Lebuh Union பகுதியில் சில மரங்கள் விழுந்ததில் கார் ஒன்றும் சேதம் அடைந்ததாக பினாங்கு மாநகர் மன்றம் தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் பதிவிட்டது. பாதிக்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக மாநகர் மன்ற ஊழியரகள் அனுப்பிவைக்கப்பட்டதை தொடர்ந்து கீழே விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லையென தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தங்களது பகுதியில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததாக பல நெட்டிசன்களும் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளனர். பினாங்கு தீவிலுள்ள Gelugor, Air itam, Teluk Bahang, Bayan Lepas மற்றும் Sungai Ara ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டன. மேலும் பெருநிலத்தில் Bukit Mertajan, Teluk Air Tawar, Penaga மற்றும் Nibong Tebal ஆகிய பகுதிகளும் பலத்த காற்றுடன் கடுமையாக மழை பெய்ததாக பலர் தெரிவித்தனர். புயல் காற்றினால் தமது வீட்டின் கூரைப் பகுதி பறந்து சென்றதால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியதாக மற்றொரு நெட்டிசன் தெரிவித்தார்.