
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-21-பினாங்கு, தஞ்சோங் தோக்கோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 16-ஆவது மாடியிலிருந்து விழுந்து 13 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 5.45 மணியளவில் 8-ஆவது மாடியில் அச்சிறுமி விழுந்து கிடப்பதைக் கண்ட பொது மக்கள், உடனடியாக போலீஸாருக்கும் அவசர மருத்துவக் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடம் விரைந்த மருத்துவக் குழுவினர், அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிச் செய்தனர்.
சிறுமியின் உடல் சவப் பரிசோதனைக்காகப் பினாங்கு பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
தொடக்கக் கட்ட விசாரணையில் இதில் எவ்வித குற்றச் செயல்களும் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என தெரியவந்துள்ளது.
எனவே, திடீர் மரணம் என வகைப்படுத்தி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



