Latestமலேசியா

பினாங்கில் முன்னாள் காதலிக்கு கொலை மிரட்டல்; குற்றச்சாட்டை மறுத்தார் உணவு விநியோகிப்பாளர்

பட்டர்வெர்த், ஆக 9 – தனது முன்னாள் காதலியை கொலை செய்யப்போவதாக மிரட்டியதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை உணவு விநியோகிப்பாளர் ஒருவர் மறுத்தார். கடந்த வாரம் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக மாஜிஸ்திரேட் சித்தி சுலைக்கா நோர்டின் (Siti Zulaikah Nordin) முன்னிலையில் 21 வயதுடைய S. டர்வின் ( Darvin) மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆகஸ்டு 4 ஆம் தேதி இரவு மணி 8.30 அளவில் Bagan Ajamமிலுள்ள பேரங்காடியில் 27 பெண்ணை கொலை செய்யப்போவதாக தண்டனை சட்டத்தின் 506 ஆவது விதியின் கீழ் டர்வின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது அவையிரண்டும் விதிக்கப்படலாம். 3,000 ரிங்கிட் ஜாமினில் டர்வின் விடுவிக்கப்பட்டதோடு இந்த வழக்கு முடியும்வரை பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கக்கூடாது அல்லது நெருங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!