Latestஉலகம்

பிரான்ஸில் கம்பீரமாக உருவெடுக்கும் முதலாவது மிகப் பெரிய இந்துக் கோவில்

பாரிஸ், ஆகஸ்ட்-24-ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் அருகே புஸ்ஸி – செயின்ட் – ஜார்ஜஸ் பகுதியில் ‘பி.ஏ.பி.எஸ்., சுவாமிநாராயண் இந்துக் கோவில்’ என்ற மிகப் பெரிய இந்துக் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

அக்கோவில் பாரம்பரிய இந்து சிற்பக் கலை வழிகாட்டியான ‘சில்ப சாஸ்திர’ விதிகளின்படி முற்றிலும் கற்களால் செதுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள திறமையான கைவினைஞர்களால் கைமுறையாகச் செதுக்கப்பட்ட மணற்கற்கள் பிரான்ஸுக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கே ஒன்றிணைக்கப்பட்டு அக்கோவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சுமார் 3,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் அக்கோவில், அடுத்த மாதம் திறக்கப்படவிருக்கிறது.

திறப்பு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 2 முதல் 14 ஆம் தேதி வரை 13 நாட்களுக்கு மதப் பாரம்பரியம், ஆன்மிகம், கலை மற்றும் இந்தியக் கலாசாரத்தை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் மிக விமரிசையாக இடம் பெறவிருக்கின்றன.

அக்கோவில் திறக்கப்படுவதன் மூலம் பாரிஸ் நகருக்கு அருகில் ஒரு முக்கிய இந்து கலாச்சார அடையாளத்தைப் பிரான்ஸ் பெறவுள்ளது. அது அங்கு இந்து மற்றும் இந்திய கலாசார வாழ்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அக்கோவில் வழிபாட்டுத் தலமாகவும், அதே வேளையில் கலாச்சார மற்றும் சமூகச் செயல்பாடுகளுக்கான மையமாகவும் திகழவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!