Latestஉலகம்

பிரேசிலில், கடனுக்கு விண்ணப்பிக்க, இறந்தவரின் சடலத்தை வங்கிக்கு எடுத்துச் சென்ற பெண் கைது

பிரேசிலியா, ஏப்ரல் 18 – இறந்த ஆடவர் ஒருவரின் பெயரில், வங்கி கடன் பெற முயன்ற பெண் ஒருவரை, அண்மையில் பிரேசில் போலீசார் கைது செய்தனர்.

சம்பவத்தின் போது, சக்கர நாற்காலியில் அமர வைத்து, அவ்வாடவரை அப்பெண் வங்கிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

எனினும், அப்பெண்ணின் நடவடிகையில் சந்தேக எழவே, அச்சம்பவம் குறித்து வங்கி பணியாளர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவ்வாடவர் இறந்து விட்டதை உறுதிச் செய்ததோடு, சடலத்தை தவறாக பயன்படுத்தி திருட்டு முயற்சியில் ஈடுபட்டதற்காக அப்பெண்ணை கைது செய்தனர்.

இவ்வேளையில், உயிரிழந்த 68 வயது நபர் அப்பெண்ணின் உறவுக்காரர் என்பது தெரிய வந்துள்ள வேளை; அவர் எப்படி, எப்போது இறந்தார் என்பதை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

17 ஆயிரம் ரைஸ் அல்லது 15 ஆயிரத்து 512 ரிங்கிட் கடன் பத்திரத்தில் கையெழுத்திட, அப்பெண் உயிரிழந்த அவ்வாடவரை, உயிருள்ளவர் போல சக்கர நாற்காலியில் அமர வைத்து வங்கிக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!