வங்சா மாஜூ, மே-8 – செவ்வாய்க்கிழமை வீசியப் புயலின் போது மேற்கூரை கசிவு ஏற்பட்டதால் Wangsa Maju சாலைப் போக்குவரத்துத் துறை கிளை அலுவலகத்தின் ஒரு பகுதி மூடப்படும்.
என்றாலும் வழக்கமான சேவை நேரத்தில் அக்கிளை அலுவலகம் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
புயல் மழையில் கூரையில் நீர் கசியும் காட்சிகள் அடங்கிய 19 வினாடி காணொலி முன்னதாக வைரலானது.
கூரையில் இருந்து ஒழுகும் நீர் அங்குள்ள சேவை முகப்பிடங்களில் விழுவதை வீடியோவில் காண முடிந்தது.
அதோடு, கணினிகள் மற்றும் பிரின்டர்கள் வைக்கப்பட்ட மேசைகளிலும் நீர் ஒழுகியது.
புயல் சேதங்களை கோலாலம்பூர் JPJ மதிப்பிட்டு வருகிறது.