பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் -17, பெட்டாலிங் ஜெயா, பண்டார் ஸ்ரீ டாமான்சாராவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 36 வயது ஆடவர் 20 முறை கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வாக்கில் அவ்வாடவருக்கும் அடையாளம் தெரியாத இன்னோர் ஆடவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நேற்று விடியற்காலை 1 மணிக்கு பக்கத்து வீட்டார் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
Persiaran Menanti-யில் உள்ள வீட்டுக்குச் போலீசார் சென்ற போது, freelance உட்கட்டமைப்பு வடிவமைப்பாளரான ஆடவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
வயிறு, கை மணிக்கட்டு, தலை உள்ளிட்ட இடங்களில் 20 கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன.
அப்படுகொலைக்குக் காரணமானவர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல் நிசாம் ஜாஃபார் (Shahrulnizam Jaafar) தெரிவித்தார்.
இறந்து போன ஆடவர் அவ்வீட்டில் தனியாக வசித்து வந்தவர் ஆவார்.
அவ்வாடவரின் பணப்பை, கைப்பேசி போன்றவை காணாததால், அவர் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை என ஷாருல் நிசாம் சொன்னார்.
மரணமடைந்த ஆடவருடன் கைக்கலந்ததில் கொலையாளிக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது.