Latestமலேசியா

பெண் மானபங்கம்; வழிபாட்டு தளத்தின் தலைவர் மீது குற்றச்சாட்டு

அலோர்காஜா, பிப்ரவரி-27- பெண் ஒருவரை கடந்த ஆண்டு மானப்பங்கப்படுத்தியதாக Madrasah எனப்படும் வழிபாட்டுத் தளத்தின் தலைவரான 70 வயது ஆடவர் மீது அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ சூ யீ ( (Teoh Shu Yee) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டபோது முகமட் சாலே ஹம்சா என்ற அந்த நபர் குற்றச்சாட்டை மறுத்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி காலை 9 மணியளவில் மஸ்ஜிட் தானா, Pengkalan Balak கிலுள்ள ஒரு விடுதியில் 46 வயது பெண்ணை மானப்பங்கப்படுத்தும் நோக்கத்தோடு பலவந்தப்படுத்தியதாக முகமட் சாலே மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் 354 ஆவது விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் 10 ஆண்டுவரை சிறை அல்லது அபராதம் அல்லது அவ்விரண்டும் விதிக்கப்படலாம்.

சமய ஆசிரியருமான முகமட் சாலேவுக்கு 4,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு இந்த குற்றச்சாட்டு மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என மாஜிஸ்திரேட் தியோ சூ யீ தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!