
பேங்காக், செப்டம்பர் 30 – பேங்காக்கில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் தாய் ஏர்வேஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பேங்காக்கிலிருந்து இயக்கப்படும் சுமார் 30 விழுக்காடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில் பேங்காக்–சிங்கப்பூர் TG407 மற்றும் சிங்கப்பூர்–பேங்காக் TG408 விமானங்களும் உள்ளடங்கும். கோலாலம்பூர், புதுடெல்லி, பிராங்க்பர்ட், முனிச், பிரஸ்ஸல்ஸ் (New Delhi, Kuala Lumpur, Frankfurt, Munich & Brussels) உள்ளிட்ட வழித்தடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
சுவர்ணபூமி விமான நிலையத்தில் தாய் ஏர்வேஸ் பயணிகளின் சுமார் 5,600 பயணப்பெட்டிகள் தேங்கியுள்ளன. அவற்றை 72 மணி நேரத்துக்குள் கையாள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



