Latestமலேசியா

19 ஆண்டுகளுக்கு முன் போலித் தகவல்: ஆடவருக்கு RM4,000 அபராதம்

குவாந்தான், செப்டம்பர் 30 – 19 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளின் பிறப்பைப் பதிவு செய்யும்போது போலித் தகவல் கொடுத்த 60 வயது ஆடவருக்கு குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 4,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.

சந்தேக நபர் 2007ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பஹாங் தேசியப் பதிவுத் துறையில் தனது மகளின் பிறப்பைப் பதிவு செய்தபோது போலித் தகவலை வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்திற்காக அவருக்கு 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

செப்டம்பர் 28ஆம் தேதி தேசியப் பதிவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் 4,000 அபராதத்தைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!