
குவாந்தான், செப்-30-பஹாங், Bentongங்கில் உள்ள Chamang பொழுதுபோக்கு வனப் பகுதிக்குச் சென்ற நண்பர்களின் மகிழ்ச்சி இறுதியில் துயரமாக மாறியது. அவர்களில் ஒருவரான 29 வயது ஆடவர் ஒருவர் எதிர்பாராத வகையில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவர் Mohd Aiman Nazmi Mohd Yusuf என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அச்சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் 1.29 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் Mohd Salahuddin Isa தெரிவித்தார். அதனை அடுத்து சம்பவ இடத்தை சுமார் 40 நிமிடங்களில் சென்றடைந்த மீட்புக் குழுவினர், அவ்வாடவர் ஏற்கெனவே நீரிலிருந்து மீட்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
நீரில் மூழ்கியதாகக் கூறப்பட்ட இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் அவரது சடலத்தை வனத் துறை பணியாளர்கள் கண்டெடுத்தனர். அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டு சடலம் மேல்நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த ஆடவர் Sungai Besiயில் உள்ள பெட்ரோல் நிலைய சிற்றுண்டிச்சாலையில் வேலை செய்து வந்ததாகவும், ஐந்து பெண்கள் உட்பட மொத்தம் 13 நண்பர்களுடன் அவர் நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.



