Latestமலேசியா

மியன்மார் நாட்டவர்களைத் திருப்பி அனுப்பும் விவகாரத்தில் மலேசியாவைக் குறைகூறுவது நியாயமற்றது – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், செப்டம்பர்-30,குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் உள்ள 1,476 மியன்மார் நாட்டவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் முதற்கட்ட நடவடிக்கையை மலேசியா தொடங்கியுள்ளது.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், மியன்மார் கடற்படைக்குச் சொந்தமான மருத்துவக் கப்பல் உட்பட 3 கப்பல்கள் மூலம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

​கட்டம் கட்டமாகத் திருப்பி அனுப்பப்படவுள்ள மொத்தம் 5,000 பேரில் இவர்கள் முதல் குழுவினர் பிரிவினர் ஆவர்.

சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதோடு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக உள்துறை அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.

​இதனிடையே, மியன்மார் அகதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டோரைத் திருப்பி அனுப்பும் விவகாரத்தில் மலேசியாவைக் குறை கூறுவது நியாயமற்றது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

​மியன்மாரின் உள்நாட்டு அரசியல் சிக்கல்களால் இது பல தசாப்தங்களாகத் தொடரும் ஒரு பிரச்னை என சுட்டிக்காட்டிய பிரதமர், மலேசியா மனிதநேய அடிப்படையில் செயல்பட்டாலும், நாட்டின் சட்ட இறையாண்மை மற்றும் பொது மக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!