Latestமலேசியா

இணையச் சூதாட்டம், தொலைபேசி மோசடி மையங்கள் முறியடிப்பு; 74 வெளிநாட்டவர்கள் கைது

கோலாலம்பூர், செப்டம்பர்-30,இணைய சூதாட்டம் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் _call centre_ கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர்.

Ops Dadu Khas நடவடிக்கையின் கீழ், கோலாலம்பூரைச் சுற்றியுள்ள 8 குடியிருப்பு வளாகங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் 74 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் 67 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவர்.

தொடக்கக்கட்ட ஆவணச் சோதனையின்படி, அவர்களில் 61 பேர் சீன நாட்டவர்கள், 12 பேர் வியட்நாமியர்கள் மற்றும் ஒருவர் தைவான் பிரஜை ஆவர்.

சம்பந்தப்பட்ட இடங்கள் இணைய சூதாட்டத்தை ஊக்குவித்தல், காதல் மோசடி மற்றும் போலி முதலீட்டு மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படுவதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

சோதனையின் போது கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகள் உள்ளிட்ட பல மின்னியல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், Yaba மற்றும் syabu என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

சம்பவம் தொடர்பாக சூதாட்டம், மோசடி, குற்றச் சதி, போதைப்பொருள் மற்றும் குடிநுழைவுச் சட்டங்களின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகக் குமார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!