
ஈப்போ, ஏப்ரல்-6-பேராக்கில் நடைபெற்ற Program MADANI Rakyat 2026 நிகழ்வு மிகப்பெரிய சாதனையைப் பதிவுச் செய்துள்ளது.
3 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 222 பேர் வருகை தந்தனர்.
இது 2024-ஆம் ஆண்டு இந்நிகழ்வு தொடங்கியதிலிருந்து இதுவரை பதிவான அதிகமான வருகையாகும் என வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
இச்சாதனை மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பதையும், அரசாங்கச் சேவைகளை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சி வெற்றி பெற்றிருப்பதையும் காட்டுவதாக அவர் சொன்னார்.
“நீடித்த நகரங்கள், தரமான வீடுகள், ஒற்றுமையான சமூகங்கள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் பொது மக்களுக்கு உதவும் சேவைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி அரசு, துறைகள் மற்றும் மக்களுக்கிடையேயான ஒற்றுமையை வலுப்படுத்துவதுடன், நிலையான வளர்ச்சியையும் முன்னேற்றுவதற்கான ஒரு முக்கிய தளமாக அமைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிகமான வருகை, இத்தகைய முயற்சிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதை உறுதிப்படுத்துகிறது…



