
சன்வே, அக்டோபர்-4,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் 58-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அதன் இந்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து, பண்டார் சன்வே, ஸ்ரீ சுப்பிரமணி ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தனர்.
அக்டோபர் 1-ஆம் திகதி நடைபெற்ற இவ்வழிபாட்டில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர்.
பணிஓய்வுப் பெற்ற முன்னாள் அதிகாரிகளும் அதில் கலந்து சிறப்பித்தனர்.
வழிபாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பினாங்கு MACC இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி, ஊழல் தடுப்பு அதிகாரிகளுடன் பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்கினால், நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும் என்றார்.
இந்நிகழ்வில் முன்னாள் அதிகாரிகள், சிவம், சேகர், அரிச்சந்திரன் ஆகியோரின் சேவையைப் போற்றி, அவர்களுக்குக் காளாஞ்சியும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
MACC-யின் இந்திய அதிகாரிகள் கடந்த 20 ஆண்டுகளாக இச்சிறப்பு வழிபாட்டினை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.