
கோலாலம்பூர், ஏப்ரல்-14-போக்குவரத்து போலீஸாரை மோதிய சம்பவத்தில், பெரோடுவா அக்சியா காரோட்டுனர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் Jalan Sultan Yahya Petra-வில் வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தில், சுமார் 27 வயதுடைய போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்த போது பின்னால் இருந்து வாகனம் மோதியதால் காயமடைந்தார்.
மோதிய பின் தப்பிச் சென்ற ஓட்டுனரை கண்டுபிடிக்க போலீஸார் விரைவான நடவடிக்கை எடுத்தனர்.
இதையடுத்து, நேற்று சந்தேக நபர் கைதுச் செய்யப்பட்டார்.
போக்குவரத்து போலீஸார் அவ்வாடவரை துரத்திச் செல்வதும், அந்நபர் 4 சக்கர வாகனமொன்றை மோதி, கடைசியில் போலீஸாரிடம் பிடிபடுவதும் வைரலான வீடியோவில் தெரிகிறது.
இந்நிலையில், மதுபானம் அல்லது போதைப்பொருள் உட்கொண்டாரா என்பதைக் கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அறிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது.
முதல் சம்பவத்தில், போக்குவரத்து போலீஸ்காரரை அவ்வாடவர் வேண்டுமென்றே மோதியது போல தெரிந்தது; மோதியப் பிறகு உதவிக்குக் கூட வராமல் அவர் ஓட்டம் பிடித்தார்…



