Latestமலேசியா

போதைப் பொருள் கடத்தல்; 75 வயது பெண்மணி உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு

பொந்தியான், மே 15 – போதைப் பொருள் கடத்தியதாக  75 வயது பெண்மணி அவரது 59 வயது சகோதரர் மற்றும் அவர்களுக்கு அறிமுகமான மேலும்  இருவர் மீது  Pontian  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.    இந்த குற்றச்சாட்டு  மீதான வழக்கு விசாரணை  உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரிடம் வாக்குமூலம் எதுவும் செய்யப்படவில்லை.  அவர்கள்    23,572.74  கிரேம்  Methylenedioxymethamphetamine   மற்றும்   362.02 கிரேம் கஞ்சாவை மே 4ஆம் தேதி  அதிகாலை மணி 1.30 அளவில்  Pontianனில் உள்ள  kukup Lautட்டில்  கடத்தியதாக  குற்றஞ்சாட்டப்பட்டனர்.  

குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை   அல்லது ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தபட்சம்    15 பிரம்படி  வழங்கப்படும்   1952ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் குற்றச்சாட்டின்  39B   விதியின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த நால்வரும்  போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் அதே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்களுக்கு  ஜாமின் வழங்கப்படவில்லை.   அவர்கள்  மீதான குற்றச்சாட்டு மீண்டும்    ஜூலை 21 ஆம்தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!