
கோலாலம்பூர், மார்ச் 23- அனைத்துலக நிறுவனங்களின் ஒத்துழைப்போடு
போதைப் பொருள் விசாரணைத்துறை கடந்த சில ஆண்டு காலமாக 176,700 கிலோகிரேம் எடைக் கொண்ட 1.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹங்காங், சீனா, தாய்லாந்து உட்பட பல நாடுகளின் போதைப் பொருள் அமலாக்க நிர்வாகம் மற்றும் தடுப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு இந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யய்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குநர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் தெரிவித்தார்.
போதைப் பொருள் குற்றவியல் விசாரணைத்துறை மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட 34 நடவடிக்கையின் மூலம் ஹரோய்ன், கெத்தமின், மெத்தாபெத்தமின் , உட்பட பல்வேறு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தவிர தென் கொரியாவின் ஒத்துழைப்போடு 9,420 கிலோ கொக்கெய்ன் போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக உசேய்ன் ஒமார் கூறினார்.



