
கோலாலம்பூர், ஜூலை 9 – போலி ஆயுதங்களை வைத்திருந்தல், உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் மற்றும் நான்கு ஆண்களை மிரட்டியது என 11 குற்றவியல் குற்றச்சாட்டுகளை கொண்டிருக்கும் பார்க்கிங் பகுதியில் வேலை செய்யும் 27 வயதான ஆடவன் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த ஆடவன் தன்னுடைய டொயோட்டா யாரிஸ் வாகன டேஷ்போர்டில் கருப்பு நிற போலி துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்தற்காக ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மேலும் ஜாலான் கிளாங் லாமா சாலையோரத்தில் போலி துப்பாக்கியைப் பயன்படுத்தி 58 வயது நபருக்கு காயம் ஏற்படுத்தியது என மேலும் பல குற்றங்கள் தொடர்பில் அவன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
இதனிடையே தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றங்களையும் மறுத்துள்ள அவனுக்கு, நிபந்தனைகளுடன் கூடிய 19,000 ரிங்கிட்டில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.