
கோலாலாம்பூர், மார்ச்-24-நாட்டில் மொத்தமுள்ள 17.49 மில்லியன் தொழிலாளர்களில் 4 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு, போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வாங்கிய அனுபவம் உண்டு.
மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனமான MEF இந்த அதிர்ச்சித் தகவலை அம்பலப்படுத்தியுள்ளது.
MEF நடத்திய ஆய்வில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது போல் நடித்து MC வாங்கியதை 26 விழுக்காட்டினர் ஒப்புக் கொண்டனர்.
அதே சமயம், சரியான காரணங்கள் இன்றி ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்த சூழ்நிலைகளை எதிர்நோக்கியதாக 57 விழுக்காட்டு முதலாளிமார்கள் தெரிவித்துள்ளனர்.
MC வாங்குவதற்காக உடல்நலம் பாதிக்கப்பட்டது போல் நடிப்பது போக, அந்த மருத்துவ விடுப்புகளில் பாதி சட்டப்பூர்வமற்ற வகையில் பெறப்பட்டதும் கண்டறியப்பட்டதாக MEF கூறியது.



