கோலாலம்பூர், ஜூலை 7 – மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ம.இ.கா உதவித் தலைவருக்கான தேர்தலில் மூன்று உதவித் தலைவர்களாக டத்தோ M . அசோஜன் , டத்தோ T . முருகையா , டத்தோ நெல்சன், ஆகியோர் வெற்றி பெற்றனர் . அசோஜன் 8,633 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் வெற்றி பெற்றார். T. முருகையா 8,566 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும் , ம.இ.கா கல்விக் குழுவின் தலைவர் செனட்டர் நெல்சன் 8,338 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றனர். டி.மோகன் 8,280 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தை பெற்றார். 58 வாக்கு வித்தியாசத்தில் டி.மோகன் தோல்வி கண்டார்.
ம.இ.கா தேர்தல் குழுவின் துணைத்தலைவர் டத்தோ செல்வம் மூக்கையா தேர்தல் முடிவுகளை இன்று அதிகாலையில் ம.இ.கா தலைமையகத்தில் அறிவித்தார்.
மத்திய செயலவைக்கு 45 பேர் போட்டியிட்டனர்.
Andrew David, Thinalalan Rajagopalu, Raveen Krishnasamy, தலைமைச் செயலாளர் RT Rajasekaran உட்பட 21 பேர் வெற்றி பெற்றதை செல்வம் மூக்கையா அறிவித்தார்.
ம.இ.காவின் தேசிய தலைவராக டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரனும் , துணைத்தலைவராக டத்தோஸ்ரீ எம். சரவணனும் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.