Latestஉலகம்

மகளின் தலையில் கேமரா பொருத்திய தந்தை

பாகிஸ்தான், செப்டம்பர் 17 – பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளின் பாதுகாப்பிற்காக, அவரது தலையில் CCTV கேமரா பொருத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய இந்த வினோத சம்பவத்தில், கராச்சியைச் சேர்ந்த அந்த பெண், ‘தனது நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க தந்தை தலையில் கேமராவை பொருத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது தந்தையே தனது பாதுகாவலர் என்றும் ஒரு காணொளியில் கூறியிருக்கிறார்.

தந்தையின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும்; இது தனது பாதுக்காப்பிற்கு அவசியம் என்று நம்புவதாகவும் அந்த இளம்பெண் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் கராச்சியில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அச்சமடைந்து, அந்த இளம் பெண்ணின் தந்தை இத்தகைய செயலில் ஈடுபட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே உலகமே கையடக்கத்திற்குள் வந்த பின், எங்கும் சிசிடிவி, எதிலும் சிசிடிவி என மாறிய நிலையில், ‘பாதுகாப்பு என்ற பெயரில் பெண்ணின் தலையில் சிசிடிவை மாட்டி விட்டது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்’ எனவும் வலைத்தளவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!