Latestமலேசியா

மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை குறைக்க முதல் ‘மடானி மார்ட்’; பிரதமர் தொடக்கி வைப்பு

குவாந்தான், ஏப்ரல்-4-நாட்டின் முதல் மடானி மார்ட் விற்பனை மையத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்துள்ளார்.

குவாந்தான், இந்திரா மக்கோத்தாவில் இந்த பல்பொருள் விற்பனைக் கடை நேற்று திறப்பு விழா கண்டது.

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணையமைச்சர் டத்தோ Dr Fuziah Salleh, பஹாங் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ Wan Rosdy Wan Ismail உள்ளிட்டோரும் அதில் கலந்துகொண்டனர்.

இத்திட்டம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க பொது மக்களுக்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மடானி அறக்கட்டளை நிர்வகிக்கும் இந்த ‘மடானி மார்ட்’ மூலம் அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றன.

‘ரஹ்மா மலிவு விலை மளிகைக் கடை’ என்ற கருப்பொருளுடன் இது செயல்படுகிறது.”

குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான மக்களுக்கு இது உதவியாக இருக்கும்.

இம்முயற்சி, உள்ளூர் தொழில்முனைவோர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் ஆதரவாக அமைந்து, மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் முக்கியமான நடவடிக்கையாகும் என அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த ‘மடானி மார்ட்’ திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு குறைந்தது ஒரு ‘மடானி மார்ட்’ கடை என, ஈராண்டுகளில் நாடு முழுவதும் 640 கடைகளைத் திறக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக Fuziah சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!