மலாக்கா, மே-26 – அரசாங்கம், மக்களுக்குப் புதிய வரிச் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை; மாறாக நியாயமான அதே சமயம் அவர்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில் இலக்கு வைக்கப்பட்ட மானிய திட்டங்களை அமுல்படுத்தும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட டீசலுக்கான இலக்கு மானியம் கூட, மீனவர்கள், சிறுதோட்ட விவசாயிகள், டேக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறுவோருக்கு அவ்வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
கிட்டத்தட்ட 10 லட்சம் மக்களுக்கு அந்த டீசல் வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது.
அரசாங்கம் வழங்கும் மானியங்களை பணக்கார வர்கத்தினர் மற்றும் தொழில் துறை ஜாம்பவான்கள் அனுபவிப்பதைத் தடுப்பதே மடானி அரசின் நோக்கம் என்றார் அவர்.
மலாக்காவில் நடைபெற்ற மடானி பேரவையில் உரையாற்றிய போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு சொன்னார்.