Latestமலேசியா

மனைவியின் மறைவுக்குப் பிறகு மருத்துவக் கண்காணிப்புக்காக IJN-இல் அனுமதிக்கப்பட்டார் துன் மகாதீர்

கோலாலம்பூர், செப்டம்பர் 30 – மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் மறைவுக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மருத்துவக் கண்காணிப்புக்காக தேசிய இருதய நிறுவமான IJN-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மகன் தான்ஸ்ரீ மொக்ஸானி மகாதீர் (Tan Sri Mokhzani Mahathir) தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக மனைவியின் மறைவால் மகாதீர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

100 வயதில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சித்தி ஹஸ்மா காலமானார். 70 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தம்பதியில், தனது வாழ்க்கைத் துணையை இழந்த மகாதீர் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!