Latestமலேசியா

‘மன்னிக்கவும், என் தந்தை இப்போதுதான் காலமானார்’; போக்குவரத்து நெரிசலில் நெஞ்சை உருகச் செய்த பெண்ணின் குறிப்பு

கோத்தா பாரு, ஜூன் 4 –

கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தபோது, ஒரு பெண், ‘மன்னிக்கவும், என் தந்தை இப்போதுதான் காலமானார்’ என்று எழுதப்பட்ட குறிப்பை தனது வாகனத்தில் தொங்கவிட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி, இணையவாசிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகநூல் பயனர் ஒருவரால் பதிவேற்றப்பட்ட இந்தச் சம்பவம், 1,900-க்கும் மேற்பட்ட எதிர்வினைகள், 69 கருத்துகள் மற்றும் 26 பகிர்வுகளைப் பெற்று வைரலானது.

திங்கட்கிழமை கிளந்தான் மாநிலத்தில் அந்தப் பெண் பயணித்த கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

அந்த குறிப்பின் மூலம் அப்பெண் தனது தந்தையின் உடலை இறுதி முறையாக பார்க்க விரைந்து செல்வதற்கு அனுமதி கோரியதாக நம்பப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்த பெண் சென்ற காருக்கு சாலை பயனர்கள் பலர் வழிவிட்டதாக தெரிகிறது.

இதனிடையே அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர் என்று நம்பப்படும் முகநூல் பயனர், உதவி செய்த அனைத்து சாலைப் பயனர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!