Latestமலேசியா

மலாக்கா தேர்தல்: அரசியல் ஒத்துழைப்பு குறித்து இன்னும் முடிவு இல்லை – அன்வார்

மலாக்கா, செப்டம்பர் 23 – மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் ஒத்துழைப்பு தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தாம் பொறுப்பு வழங்கியுள்ளதாக பிரதமர் கூறினார். ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருந்தால், அதனைப் பரிசீலித்து பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெர்சாத்து கட்சிக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக அன்வார் உறுதிப்படுத்தினார். எனினும், எந்தவொரு ஒத்துழைப்பு குறித்தும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தை பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் குழுவிடம் விட்டுவிட்டு நாட்டை நிர்வகிப்பதில் தாம் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

மலாக்கா சட்டமன்றம் நேற்று கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகளை நிர்ணயிப்பதற்கான சிறப்புக் கூட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!