அலோர் காஜா, ஜூன் -1 – மலாக்கா, ரெம்பியாவில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் இரண்டாகப் பிளந்து, கணவனும் மனைவியும் உயிரிழந்தனர்.
அக்கோர விபத்து Jalan Bukit Hantu-வில் நேற்றிரவு 7.50 மணியளவில் நிகழ்ந்தது.
அதில் மோட்டார் சைக்கிளோட்டியான 67 வயது
S R Muthusamy சம்பவ இடத்திலேயே பலியான வேளை, அவரின் மனைவி 57 வயது S Manomani, அலோர்காஜா மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் போது உயிரிழந்தார்.
அத்தம்பதி சம்பவத்தின் போது, Lubok China, Taman Wira Mas-சில் உள்ள தங்களின் வீட்டுக்குத் திரும்புவதற்காக Lendu-வில் இருந்து அலோர் காஜா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, பொது பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் ஓட்டி வந்த கார் எதிர் திசையில் புகுந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
அதில் மோட்டார் சைக்கிள் இரண்டாகப் பிளந்து அதன் ஓட்டுநர் கை, கால்கள் மற்றும் தலையில் படுகாயம் அடைந்து அங்கேயே உயிரிழந்தார்.
20 வயது காரோட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடன் வந்த 22 வயது நபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
விபத்தில் பலியானவர்களின் உடல்கள், சவப்பரிசோதனைக்காக அலோர் காஜா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.