Latestமலேசியா

மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்ந்த சரிகமப ஹமித்ரா & இதர கலைஞர்களின் சரிகமப Lil Champs Live கலை நிகழ்ச்சி

கோலாலம்பூர் – மே 22 – அண்மையில் இந்தியாவின் Zee தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற சரிகமப Lil Champs பாடல் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று மலேசியாவிற்கு பெருமை சேர்த்த சிலாங்கூர் மகோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளியின் மாணவியான பாடகி ஹெமித்ரா ரவிச்சந்திரனை ( Hemitraa Ravichandran ) கௌரவிக்கும் வகையில் மலேசியாவில் சரிகமப Lil Champs Live சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருக்கிறது.

ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் .சரவணன் தலைமையில் எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி செராஸ் Menara PGRM , Dewan Wawasanனில் மாலை மணி 6.30 அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சரிகமப Lil Champs
நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்ற இதர ஆறு பாகர்களுக்ம் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

Zee தமிழ் தொலைக்காட்சியினால் மலேசியாவின் சுவர்ணலதா என புகழப்பட்ட 12 வயதான ஹெமித்ரா, கோலாலம்பூரில் தம்மை கௌரவிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சி குறித்து வணக்கம் மலேசியாவுடன தனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார்.

இசைத்துறையில் சாதனை படைக்க விரும்பும் நமது மண்ணின் மைந்தர்களுக்கு குறிப்பாக கலைத்துறையில் ஆர்வம் உள்ள சிறார்களுக்கு சிறந்த உற்சாகத்தை வழக்கும் வகையில் Hemitraa வின் வெற்றி அமைந்துள்ளது.

அவரது கலையுலக பயணத்திற்கும் அவரது திறமையை உள்ளூர் கலைஞர்கள் நேரடியாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சரிகமப Lill Champs Live நிகழ்ச்சிக்கான முக்கிய ஸ்போன்சராக Vishal Steremzy Enterprise , Tasly Marketing மலேசிய சென்டிரியான் பெர்ஹாட் , தாமரை ஜீவல்ஸ் சென்,பெர்ஹாட் ஆகியவற்றுடன் மேலும் சில நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் நாட்டிற்கு பெருமைத் தேடித்தந்த
இளம் பாடகி Hemitraa வுக்கு சிறப்பை சேர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளராக இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாக விசால் தெரிவித்தார்.

முழுக்க முழுக்க சரிகமப Lil Champs கலைஞர்களுடன் நமது இளம் பாடாகி Hemitraa வும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் அமையும் என்பதோடு இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவும் திரளாக இருக்கும் என நம்பலாம். இந்த நிகழ்ச்சியை நேரில் காண விரும்புவோர் Ticket2U.com என்ற அகப்பக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!