மலேசியா
மலேசியர்களுக்கு விசா இல்லா விமானப் பயணச் சலுகை வழங்கும் கனடா

கோலாலம்பூர், மே-27,
கனடா அரசு, மலேசியர்களுக்கான விசா இல்லா விமானப் பயண அனுமதியை விரிவுபடுத்தியுள்ளது.
இனி, கடந்த 10 ஆண்டுகளில் கனடா தற்காலிக குடியிருப்பு விசா பெற்றவர்கள், அல்லது தற்போது செல்லுபடியாகும் அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள், எளிதாக eTA இணையப் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் வெறும் 7 கனடிய டாலர் அதாவது சுமார் 22 ரிங்கிட் மட்டுமே என, கோலாலம்பூரில் உள்ள கனடிய உயர் ஆணையம் கூறியது.
விண்ணப்பங்கள் பெரும்பாலும் சில நிமிடங்களில் அங்கீகரிக்கப்படுகின்றன.
இந்த eTA ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும், அல்லது கடப்பிதழ் காலாவதியாகும் வரை.
இதன் மூலம் மலேசியர்கள், கனடாவுக்கு 6 மாதம் வரை தற்காலிகமாக விமானம் மூலம் பயணம் செய்யலாம்.
இது இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.



