Latestமலேசியா

மலேசியர்கள் ஈரான் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப்ரவரி -26 – ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்ததால், மலேசியர்கள் தேவையின்றி ஈரான் செல்லக்கூடாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் (Mohamad Hasan) எச்சரித்துள்ளார்.

தற்போது 13 மலேசியர்கள் ஈரானில் தங்கியுள்ளனர். அவர்கள் அரசாங்கம் வழங்கிய மூன்று முறை அறிவுறிக்கையை புறக்கணித்து, தன்னார்வத்தால் அங்கேயே தங்கியுள்ளனர். அவர்களால் பிறகு அரசாங்கத்தை குற்றம் சாட்ட முடியாது என கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

கடந்த ஆண்டு, அமெரிக்கா ஈரானில் அணு நிலையத்தை தாக்கிய போது, மலேசியர்கள் அவசரமாக வெளியேற்றப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் Tehran முதல் 1,200 கிலோ மீட்டர் பயணம் செய்து Ashgabat சென்றனர். அ

ப்போது மலேசியா ASEAN தலைமை வகித்திருந்ததால், பிற நாடுகளுடனும் இணைந்து பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டது.

மலேசியர்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமை என்பதையும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!