Latestமலேசியா

மீன் பிடிக்க வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்துச் சிதறியது; சபாவில் ஆடவர் கவலைக்கிடம்

கோத்தா கினாபாலு, அக்டோபர்-17,சபா, கோத்தா கினாபாலுவில் மீன் பிடிப்பதற்காக வீட்டில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த 37 வயது ஆடவர், அது திடீரென வெடித்ததில் படுகாயமடைந்தார்.

மங்காத்தால் பட்டணத்தில் உள்ள கிராமத்தில் ஒரு வீட்டின் சமையலறையில் நேற்று இச்சம்பவம் நிகழ்ந்தது.

வெடிப்பில் ஆடவரின் கைகளிலும் வயிற்றுப் பகுதியிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகக் கோத்தா கினாபாலு மாவட்டப் போலீஸ் கூறியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த ஆடவர், சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

முதற்கட்ட விசாரணையில், மீன் பிடிப்பதற்காக அந்த ஆடவர் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வெடிகுண்டு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சில பொருட்களையும் போலீஸார் கண்டெடுத்தனர்.

வெடிப்புக்கான காரணம், வெடிப்பொருட்கள் எப்படி கிடைத்தன மற்றும் இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை தொடருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!