
மெக்சிகோ கலவரத்தில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா
புத்ராஜெயா, பிப்ரவரி-24,
மெக்சிகோவில் ஏற்பட்டுள்ள கலவரங்களில் மலேசியர் எவரும் பாதிக்கப்படவில்லை என, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.
என்றாலும் அங்குள்ள மலேசியத் தூதரகம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த கலவரங்கள் குற்றச்செயல் கும்பல்களை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
இதனால் சில பகுதிகளில் சாலை மறியல்கள் மற்றும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
ஆங்காங்கே கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோக்களும் வைரலாகியுள்ளன.
எனவே, மெக்சிகோவில் உள்ள மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அபாயம் அதிகமான பகுதிகளை தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆபத்து அவசர நிலைகளில் உதவி பெற ஏதுவாக, மலேசியர்கள் தூதரகத்தில் தங்கள் தகவல்களை பதிவுச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதில் தொடர்ந்து உறுதியாக உள்ளதாக விஸ்மா புத்ரா கூறியது.



