Latestமலேசியா

மேற்காசிய நெருக்கடி: நாட்டின் மருந்து மாத்திரை கையிருப்பு சீராக உள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்

புத்ராஜெயா, மார்ச்-23-மேற்காசியாவில் நெருக்கடி நீடித்தாலும், நாட்டில் மருந்து மாத்திரைகளின் கையிருப்பு சீராகவும், கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.

நடப்பு மதிப்பீட்டின் படி, அந்த பதற்ற நிலையால் குறுகிய கால தாக்கம் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவே என KKM கூறியது.

அமைச்சின் மருந்து கையிருப்பு வழக்கமாக 1 முதல் 3 மாதங்களுக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்யும் அளவுக்கு போதுமானதாக இருக்கும்.

தவிர, பராமரிப்பு நிறுவனங்கள் வாயிலாகவும் தனியாக 2 மாதங்கள் வரையிலான கையிருப்பு தருவிக்கப்படும்.

என்றபோதிலும், மருந்து கையிருப்பு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வரும், வருகிறது என அறிக்கை வாயிலாக KKM கூறிற்று.

அவ்வகையில் நேற்று வரையிலான கண்காணிப்பில் எந்த பற்றாக்குறையும் கண்டறிப்படவில்லை.

என்றாலும், நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என அமைச்சு கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!