Latestமலேசியா

மைக்ரோசோஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு; விளக்கமும் இழப்பீடும் கேட்கும் விமான நிறுவனங்கள்

கோலாலம்பூர், ஜூலை-21 – மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் “Windows” இயங்குதளத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஏற்பட்ட பிரச்னைக்கு அந்நிறுவனம் விளக்கமளிப்பதோடு, விமான நிறுவனங்களுக்கு இழப்பீடும் வழங்கியாக வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அந்த உலகலாய மென்பொருள் செயலிழப்பால் ஏராளமான விமான நிறுவனங்கள் இலட்சக் கணக்கில் நட்டமடைந்துள்ளதாக கேப்பிட்டல் ஏ பெர்ஹாட் (Capital A Bhd) தலைமை செயலதிகாரி தான் ஸ்ரீ தோனி ஃபெர்னாண்டஸ் ( Tony Fernandes) கூறினார்.

Crowdstrike-டின் மன்னிப்பை ஏற்கிறோம்; ஆனால் மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் விளக்கத்திற்கு இன்னமும் காத்திருக்கிறோம் என அவர் சொன்னார்.

“இந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கருணையென்பதே கிடையாது. கோவிட் காலத்தில் அப்படித்தான் எங்களை நடத்தினார்கள். இன்று அவர்களுக்கு ஒரு பிரச்னை என வரும் போது மட்டும், அதை நாங்கள் புரிந்துக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்” என தனது LinkedIn பதிவில் தோனி ஃபெர்னாண்டஸ் காட்டமாகக் கூறினார்.

மைக்ரோசோஃப்ட் சர்வரில் (server) முன்னதாக ஏற்பட்ட கோளாறால் KLIA 2-ல் பாதிக்கப்பட்ட ஏர் ஆசியாவின் செயல்பாடுகள் இரண்டாவது நாளான நேற்று சற்று சீரடைந்தன; என்ற போதிலும் மீண்டும் அப்பொடியொரு கோளாறை எதிர்கொள்ள தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக தோனி மேலும் கூறினார்.

நூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன் Check-in பதிவுத் தொடங்கி நுழைவுச் சீட்டு பிரிண்ட் எடுப்பது வரை கைமுறையாக (manual) மேற்கொண்டோம்.

இதனால் விமானப் பயணங்களை இரத்துச் செய்வதை எவ்வளவுக் குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்தோம் என்றார் அவர்.

சில பயணங்கள் தாமதமானாலும், அனைத்துப் பயணிகளையும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டுச் சேர்ப்போமென்றும் தோனி உறுதியளித்தார்.

இந்த Crowdstrike கோளாறு காரணமாக உலகம் முழுவதும் கணினியின் பயன்பாடு ஸ்தம்பிதம் கண்டு, 1,400-க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள், வங்கிச் சேவைகள், மருத்துவமனைச் சேவைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!