Latestமலேசியா

மோசடிகளைத் தவிர்க்க புதிய கணக்குகள் திறப்பதற்கு வங்கிகள் கடுமையான விதிமுறைகள் விதிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 12 – தற்போது மலேசியாவில் “Akaun Keldai“ எனப்படும் மோசடி வேலைகளுக்கு வாடகைக்கு விடப்படும் வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி பல மில்லியன் ரிங்கிட் கணக்கான மோசடி செய்பவர்கள் அதிகரித்து வருவதால்
புதிய கணக்குகளைத் திறக்கும் வாடிக்கையாளர்களுக்கு, வங்கிகள் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன.

புதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் வருமான ஆதாரங்கள் குறித்த ஆவணங்கள் அல்லது அவர்களின் முதலாளிகளிடமிருந்து கடிதங்களை வழங்க கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களைப் பொறுத்தவரை, உயர்கல்வி கூடத்தில் ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தைக் காட்டுவது மட்டுமல்லாமல், மாணவர் அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிதாக வங்கி கணக்கு தொடங்க விரும்பும் மாணவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் மூத்த குடிமக்கள் மீது வங்கிகள் சிறப்பு கவனம் செலுத்தும்.

பொதுவாக இந்த தரப்பினரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள்தான், மோசடிக்காரர்களால் குறிவைக்கப்பட்டு குற்றச்செயல்களுக்கு இயக்கப்படுகின்றன.

அப்படி மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி வங்கி கணக்குகள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கப்படும் வரை, அவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எனவே, தெரிந்தோ தெரியாமலோ தங்கள் வங்கி கணக்குகள் மோசடிக்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வங்கி வட்டாரம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2021-ல் மட்டும் 29769 வங்கி கணக்குகள் மோசடிக்காரர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை 1.218 பில்லியன் ரிங்கிட் இழப்புகளை உள்ளடக்கிய ஆன்லைன் மோசடிகளில் மொத்தம் 34,497 வழக்குகள் 2023 இல் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!