Latestஉலகம்சிங்கப்பூர்

யிஷுனில் கேரளா பாணியில் கோவில்; 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதல் இந்து கோவில்

சிங்கப்பூர், ஏப்ரல்-3-சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் முதன் முறையாக புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படுகிறது.

கேரளா பாணியிலான அக்கோவில் Yishun Avenue 3 பகுதியில் நிர்மாணிக்கப்படும் என, கலாச்சாரம்-சமூகம்-இளையோர் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்தார்.

இப்புதியக் கோவில் ஸ்ரீ குருவாயூரப்பன் ஐயப்பன் ஆலயம் என அழைக்கப்படும்.

பக்தர்கள், சபரிமலை நேர்த்திக்கடனையும் அங்கேயே செலுத்தலாம் என்றார் அவர்.

வரும் ஆகஸ்ட் செம்டம்பர் வாக்கில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் ஆகக் கடைசியாக 2006-ஆம் ஆண்டு ஓர் இந்துக் கோயில் கட்டப்பட்டது.

அந்த அருள்மிகு ஸ்ரீ வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம் Sengkang-கில் அமைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!