Latestமலேசியா

ரவாங் கோயில் உடைப்பு; தாமிம் டாரி, இதர மூவர் விடுவிப்பு

ரவாங் கோயில் உடைப்பு; தாமிம் டாரி, இதர மூவர் விடுவிப்பு

ஷா ஆலாம், பிப்ரவரி-13,

அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கோயில்களுக்கு எதிராக போராடுபவராக காட்டிக் கொள்ளும் Tamim Dahri மற்றும் அவரின் 3 நண்பர்களும், போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ரவாங், தாமான் ரவாங் பெர்டானா உச்சிமலை முனீஸ்வரர் கோயில் உடைப்பு தொடர்பில் நால்வரையும் 2 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க ஷா ஆலாம் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று காலை வெளியிட்ட உத்தரவை, உயர் நீதிமன்றம் மாலையே இரத்துச் செய்தது.

Tamim-மின் வழக்கறிஞர் Aidil Khalid அதனை உறுதிப்படுத்தினார்.

அத்துமீறப்பட்ட நிலத்தை சுத்தம் செய்ய தாம் தான் அந்த நால்வரிடமும் உதவிகேட்டதாக, கோயில் நிலத்துக்குச் சொந்தக்காரரான Ismail Mina என்பவரே உயர் நீதிமன்றத்திற்கு வந்து வாக்குமூலம் கொடுத்ததால், தடுப்புக் காவல் இரத்தானது.

இதையடுத்து Tamim-மும் இதர மூவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

சொந்தமாக மண்வாரி இயந்திரத்தை கொண்டுவந்து அக்கோயிலின் ஒரு பகுதியை அவர்கள் இடித்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே Tamim தான், அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கோயில்களுக்கு எதிராக கடந்த வாரம் கோலாலம்பூர் SOGO பேரங்காடி வளாகத்தில் பேரணிக்குக் கூட முயன்று கைதானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!