பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 16 – சிலாங்கூர், ரவாங், புக்கிட் செந்தோசா, ஜாலான் செரோஜாவிலுள்ள, மளிகை கடை ஒன்றில் கொள்ளையிட்டு தப்பி சென்ற ஆடவன் ஒருவனை, போலீசார் தேடி வருகின்றனர்.
அரிவாள் ஏந்தி கொள்ளையிட்ட அந்த மர்ம ஆடவன், கம்பி நீட்டுவதற்கு முன், கடையில் இருந்த பண இயந்திரத்தையும் உடைத்து சேதப்படுத்தி சென்றதை, ஹுலு சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் முஹமட் அஸ்ரி யூனோஸ் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் மணி 12.30 வாக்கில், அக்கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொள்ளையிட்டு வாகனத்தில் தப்பிச் செல்வதற்கு முன், பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமான இரு கைப்பேசிகளுடன் சுமார் 300 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் அவன் களவாடிச் சென்றதாக, அஸ்ரி ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
எனினும், அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. அச்சம்பவம் தொடர்பில், தகவல் அறிந்த பொதுமக்கள் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.