
சூரிக், ஆகஸ்ட்-19-உலகக் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் திருமணத்தின் போது, அவரது மனைவி ஜோர்ஜினா ரோட்ரிகஸ் (Georgina Rodriguez) அணிந்திருந்த சுமார் 308 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வைர நகைத் தொகுப்பு உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிரபல ஆடம்பர நகை நிறுவனமான Chopard தயாரித்த மிக மதிப்புமிக்க நகைத் தொகுப்பாக இது கருதப்படுகிறது.
ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கண்டெடுக்கப்பட்ட 342 கேரட் எடையுள்ள அரிய வைரக் கல்லில் இருந்து, ஒரு முழு ஆண்டாகச் செதுக்கப்பட்டு இந்த ‘Garden of Kalahari நகைத் தொகுப்பு உருவாக்கப்பட்டது.
இதில் 50 கேரட் வைரம் பதிக்கப்பட்ட நெக்லஸ், கைவளையல் மற்றும் மோதிரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இருவரும் முதன்முதலில் சந்தித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி போர்ச்சுகலில் உள்ள அவர்களின் இல்லத்தில் மிக எளிமையான முறையில் குடும்பத்தினர் முன்னிலையில் இத்திருமணம் நடைபெற்றது.
இந்த முழுமையான வைர நகைத் தொகுப்பை ஒரே நேரத்தில் அணிந்த முதல் நபர் என்ற பெருமையை ஜோர்ஜினா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



