பெய்ரூட், செப்டம்பர்-30 – லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தொடர்ந்து குண்டு மழைப் பொழிந்து வரும் இஸ்ரேலியப் படைகள், அங்குள்ள கோலா (Kola) மாவட்டத்திற்கும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளன.
லெபனானிய இஸ்லாமிய இயக்கமான Jamaa Islamiya-வுக்குச் சொந்தமான அடுக்குமாடி வீட்டைக் குறி வைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டானர்.
அவர்களில் மூவர் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் என, பாலஸ்தீன விடுதலைக்கான முன்னேற்ற முன்னணி PFLP உறுதிப்படுத்தியது.
கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான் தாக்குதல்களில் 105 பேர் கொல்லப்பட்ட வேளை, 395 காயமடைந்தனர்.
ஒட்டுமொத்தமாக 2 வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, ஆறாயிரம் பேர் வரை காயமடைந்துள்ளதாக லெபனானிய வெளியுறவு அமைச்சு கூறியது.