கோத்தா கினபாலு, ஜூலை 25 – வங்கியிலிருந்து சட்டவிரோதமாக 24.2 million ரிங்கிட் பண மீட்பு மோசடியில் ஈடுபட்டதாக 10 பேர் மீது கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்களில் இருவர் இந்தியர்கள் என நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பெயர் பட்டியல் மூலம் தெரிவந்துள்ளது. வங்கியின் கிளையின் நிர்வாகி தலைமையில் பரஸ்பர நன்மைக்கான திட்டமிட்ட கடுமையான குற்றச் செயல் கும்பலில் அந்த 10 பேரும் இடம் பெற்றிருந்ததாக நீதிபதி அமிர் ஷா அமிர் ஹசான்
( Amir Syah Amir Hassan ) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் அனைவரும் ஆகஸ்டு 26ஆம் தேதி மற்றும் ஜூலை 10ஆம் தேதிக்கிடையே கோத்தா கினபாலுவிலுள்ள MBSB வங்கிக் கிளையில் இக்குறத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்கள் குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கும் குறைவான மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறை தண்டனை விதிக்கப்படும். குற்றவியல் சட்டத்தின் 130 V உட்பிரிவு (1 ன் ) கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்களிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அவர்களுக்கு ஜாமினும் வழங்கப்படவில்லை. அவர்களை மீண்டும் செப்டம்பர் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.