கோலாலம்பூர்,செப்டம்பர் -27, மலேசியாவில் வெளியிடப்படும் இலக்கயியல் வாகனமோட்டும் உரிமத்தை தாய்லாந்திலும் பயன்படுத்த முடியும்.
அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவரே X தளத்தில் அதனை உறுதிப்படுத்தினார்.
மலேசியக் கார்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களில் தாய்லாந்துக்கு விடுமுறை கழிக்க வருவோர், கண்டிப்பாக மோட்டார் வாகனமோட்டும் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
அது வழக்கம் போல் வாகனங்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களாகவும் இருக்கலாம் அல்லது இலக்கயியல் (digital) வடிவிலும் இருக்கலாம்.
பிரச்னையில்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.
ஒருவேளை இலக்கயியல் உரிமம் தாய்லாந்தில் ஏற்றுக் கொள்ளப்படாதோ என கலக்கம் இருந்தால், சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வின் இலக்கயியல் உரிமத்தை அச்சடித்து உடன் கொண்டுச் செல்லலாம் என்றார் அவர்.
வாகனமோட்டும் உரிமம் இல்லாமல் வருவதோடு, குறைந்த பட்சம் கைப்பேசியிலாவது டிஜிட்டல் உரிமத்தை வைத்திருப்பது நல்லது என அவர் சுட்டிக் காட்டினார்.